Pages

Wednesday, March 14, 2012

7 ஆறாவது புலன்…தகவல் தொழில் நுட்ப உலகில் ஒரு புதிய புரட்சி…

ஸ்பீல்பேக்கின் minority report பார்த்திருக்கிறீரகளா அதில் ரொம் குரூஸ் தனது கை அசைவுகளால் ஒரு பெரிய கணினி திரையில் தகவல்களை கையாண்டிருப்பார். ஸ்பீல்பேக்கினால் 2054 ஆம் ஆண்டில் என சொல்லப்பட்ட ஒரு விடயம் 2009 ஆம் ஆண்டிலேயே சாத்தியமாயிருக்கிறது அதுதான்.
உலகம் முழுவதும் இப்போது இதுதான் பேச்சு. இதை கண்டு பிடித்திருப்பவர் அமெரிக்காவில் உள்ள MIT media lab இன் பட்டதாரி மாணவனும் இந்தியாவை சேரந்தவருமான pranav mistry.

SIXTH SENSE – என்றால் என்ன…?

மனிதன் மெய் வாய் கண் மூக்கு செவி என்ற ஐம்புலன்களை கொண்டே தன்னை சுற்றி உள்ள உலகைப்பற்றி தகவல்களை பெற்றுக் கொண்டு அதற்கேற்ப சரியான செயற்பாட்டை மேற்கொள்கிறான். இந்த ஆறாவது புலன் என்ன செய்கிறது என்றால் நாங்கள் வாழும் சூழலிலேயே டிஜிட்டல் உலகத்தை பாரக்க வழி செயகிறது. முழு உலகையுமே கணினியாக மாற்றுகிறது. மொனிட்டர் தேவையில்லை Iphone தேவையில்லை எந்த ஒரு தட்டையான மேற்பரப்பும் போதும். விசைப்பலகை தேவையில்லை உங்கள் விரலகளே போதும்.

நீங்கள் நீனைத்த மாத்திரத்தில் உங்கள் விரலசைவுகளில் digital world விரிந்து கிடக்கும்.

கழுத்தில் தொங்கவிடப்படும் ஒரு சிறிய வெப் கமெரா. மினி புரஜெக்டர், இரண்டும் காவிச்செல்லக்கூடிய ஒரு கணினி அல்லது ஒரு செல்போனுடன் இணைக்கப்பட்டிருக்கும். மினி புரொஜக்டர் எந்த மேறபரப்பையும் ஒரு interface ஆக மாற்றுகிறது. மினி கமரா உங்களின் விரல்களின் அசைவுகளையும் நீங்கள் பயனபடுத்தும் மேறபரப்பையும் வீடியோ எடுத்து கணினிக்கு அனுப்புகிறது. கணினியில் உள்ள மெனபொருள் மூலம் எல்லா தகவல்களும் அனலைஸ் செய்யப்பட்டு உங்கள் விரல் அசைவுகளாலேயே புரொஜெக்டரால் காடசிப்படுத்தப்படும் தகவல்களை கையாளவும் வழி செய்கிறது.

No comments:

Post a Comment